* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  நான் கிறுக்கன்தான்…
 
நான் கிறுக்கன்தான்…



என் கவிதைகளில் பலது
உனக்கு பிடிக்காமல்
இருக்கலாம்

ஏற்றுக்கொள்கிறேன்
அவையாவும் கற்பனைகள்
என்பதால்

.

என் கவிதைகளில் 
எழுத்துப் பிழைகள் 
அதிகம் இருக்கலாம்

ஏற்றுக்கொள்கிறேன்
மன்னித்துவிடு
நான் உன்னைப்போல்
படித்தமேதையல்ல

.

என் கவிதைகளில் 
தலைப்புகள்
பொருத்தமற்றதாக 
இருக்கலாம்

ஏற்றுக்கொள்கிறேன்
உண்மைதான் 
நான் எழுத நினைப்பது   ஒன்று 
எழுதி முடிப்பது வேறொன்று
எல்லாம் 
உன்னை காயப்படுத்தக் 
கூடாது என்பதால்தான்

.

என் கவிதைகள் 
எதுவுமே நீ வாழ்த்த
தகுதியற்றனவாக இருக்கலாம்

இதையும் ஏற்றுக்கொள்கிறேன்
உன்னால் 
கிறுக்கனானேன் என்பதால்

-யாழ்_அகத்தியன்






Add comment to this page:
Your Name:
Your website URL:
Your message:

 
  Today, there have been 32 visitson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்