* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  இப்படிக்கு நான்.......!
 

இப்படிக்கு நான்.......!





என் கண்கள் காட்டிக் கொடுத்த
உண்மைகளை விட என் காதுகள்
கேட்ட பொய்களே அதிகம்....







*******************





எனது கல்லை எப்போதும்
இரண்டு விடயங்களை
நோக்கியே வீசுகிறேன்
தவறினால்
ஒன்றாவது விழும்
என்பதால்.........






******************





இந்த உலகத்துக்கு நான்
ஒரு புத்தகமாகவாவது
இல்லாமல் இறந்தாலும்
ஒரு தத்துவத்தையாவது
விட்டுத்தான் இறப்பேன்......






******************





நான் எதையும்
சம்பாதிக்கவில்லை
என்னைத் தவிர எனக்கு.....






******************






நான் எதையும் இழக்கத் தயார்
இழப்பதைவிட பெறுவது
பெறுமதி வாய்ந்ததாக
இருக்குமானால்......






******************






என்னை விளங்கப்படுத்த
கரும்பலகை தேவையில்லை
ஒரு காரணம் போதும்.....






******************





நான் வற்றிப் போனபின் தான்
தெரிந்து கொண்டேன் என்னை
எத்தனைபேர் குடி நீராகா
பாவித்தார்கள் என்பதை......






******************





என்னிடம் இருப்பதே  அதிகம்
என்பதை தெரிந்து கொண்டபின் தான்
இறைவனை நான் திட்டுவதில்லை........






******************



என் இறந்த காலம் என்ற கண்ணாடியே
நிகழ்காலத்தில் நான் தடுமாறாமல்
நடக்க உதவி செய்கிறது......






******************





இறைவனுக்கு தெரிந்த என் எதிர்காலம்
எனக்கு தெரிந்தால் சில வேளைகளில்
என் நிகழ்காலத்தையே நான் வெறுக்ககூடும்.....






******************






ஆசைபட்டால் கடன்பட்டாவது
அனுபவிப்பேன்.......






******************






பிரைச்சனைகள் என்னை
குளப்பும் போதுதான்
நான் குளம்பாமல்
இருப்பேன்......






******************





சின்ன வாய்ப்புகளையும்
தவறவிட மாட்டேன்
அனாலும்
பெரிய வாய்புகளுக்காய்
காத்திருக்கிறேன்......






******************





நான் தெய்வம் இருக்கு என்பதை
நம்புகிறேன்


அனால்


மததின் மூடனம்பிக்கையை
பின்பற்றுவதில்லை......






******************





என் விரல்கள் உள்ளவரை
மோதிரங்கள் தொலைந்ததற்காய்
கவலைப்படமாட்டேன்......






******************





உனக்கு நான் உதாரணமல்ல
உனக்கு நான் ஒரு தத்துவம்.........






******************




தினமும் தோற்றுப்போகிறேன்
பேசாமலிருக்க நினைத்து
பேசிக்கொண்டிருப்பதால்.......






******************




கடவுள் இருக்கிறார இல்லையா
என்று சந்தேகப்பட்டு வாழ்வதைவிட
கடவுள் இருக்கிறார் என்று
நம்பி வாழ்வதே மிகவும் சிறந்தது...






******************





என் வாழ்வில் நான் ஒரு போதும்
விழவே மாட்டேன் என்பதை நம்பவில்லை
எத்தனை தடவை விழுந்தாலும்
எழுவேன் என்பதைத்தான் நம்புகிறேன்.....





******************





வாழும்வரை நிழல் தருவேன்

இறந்தால்
என் காதல் துணைவியே

என்னை விறகாக்கி
உன் பசி தீர்ப்பேன்......






******************





மனிதனுக்கான மரியாதை
வாசல்வரை
பணத்திற்கான மரியாதை
மூலஸ்தானம்வரை.....






*****************************************************
**************************************
*******************************
**************************
******************
**************
******
**
*





 
-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 10 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free