* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  மலரானவளே......!
 


மலரானவளே....!






நிலவு பிடிக்குமா என்கிறாய்
நீ காணாமல் போனால்
உன்னை கண்டுபிடிக்க
நிலவைத்தானே நான்
அடையாளாமாய்
வைத்திருக்கிறேன்.....






*************







எல்லா பூக்களும்
எப்படியோ வாடிவிடுகிறது
உன் புன்னகை பூ மட்டும்தான்
வாடமலிருக்க பூக்கிறது.......






*************







குடிச்சாவது பழகியிருக்கலாம்
நான் முத்தம் தராவிட்டால்
குடிச்சிடுவேன் என்று சொல்லியே
கெஞ்சாமல் விரும்பியளவு
உன் முத்தங்களால்
குளித்திருப்பேன்........






************







என்னை இதயம் இயக்கவில்லை
என் இதழ்கள்தான் இயக்குகிறது
பார் முத்தம் கொடுக்க
உன் உச்சி முதல் பாதம்வரை
மாறி மாறி என்னை இயக்கிக்
கொண்டிருக்கிறததே......






*************







என்னை கவிஞனாக்கியது
மட்டுமல்ல
கவிதையாய் என்னை
அழகாக்கியதும்
நீதான்.......






************








எதற்காக நீ
பூச் செடி
வளக்கிறாய்..



உன்னைப் போல்
நடமாடும் பூவாக
பூக்கவே முடியாது
என்று ஆடிக்காட்டவா...






**********************************
************************
***************
*****
**
*




-யாழ்_அகத்தியன்



 
  Today, there have been 78 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free