* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  முகப்பு
 


 


பகல் "நிலா"
 இறந்தால் சொர்க்கம் எப்படி
இருக்கும் என்பதை
வாழும்போது
தந்து கொண்டிருப்பவள் நீ..!

 

-யாழ்_அகத்தியன்

 
 என் கவிதைக்குள்
யாரும் இல்லை
கிறுக்கல் ஆனது

என் காதலுக்குள்
நீ இருக்கிறாய்

கவிதையானது
என் வாழ்க்கை..

 

-யாழ்_அகத்தியன்


   

வாடாத உன் புன்னகை
கண்டு பொறாமைப்படுகிறது
பூக்கள் எல்லாம்..!
 


-யாழ்_அகத்தியன்
 இல்லாத கடவுளை
நம்பாத எனக்கு
இருக்கின்ற
காதல் தந்த
வரம் நீ..


-யாழ்_அகத்தியன்

 விழுந்தால்
மண்ணோடு மண்ணாக
நீ இன்னும் சாகவில்லை


மறந்துவிடாதே…
இன்னும் நீ உயிர்
உள்ள விதை என்பதை..-யாழ்_அகத்தியன்
என் கனவே 
நீ என்பதால்தான்
கலைந்துபோகும் 
உறக்கத்தை
விரும்புவதில்லை 
நான்


*
 ***


உன் விழிகளுக்கு
இமையாக 
மட்டுமல்ல

உன் உறக்கத்தில்
உன்னைக் காக்கும்
விழியுமாவேன் நான்..


-யாழ்_அகத்தியன்

 

 
உன்தாயைப்போல்
என்நேரமும்
உன்னைக்கவனிக்க
என்னால்
முடியாமல்போனாலும்


உன்னைக்
காணதநேரங்களில்
தாயாகநான்ஏங்கித்
தவிப்பதுண்டு...-யாழ்_அகத்தியன் 

 எல்லோருக்கும்
தைபிறந்தால்தான்
வழிபிறக்கும்
 

எனக்குமட்டும் 
எப்போதும்தைதான் 
என்வழியே
நீ என்பதால்
 ..-யாழ்_அகத்தியன் 
வருசத்தில் முதல் 
நாளில் மட்டும் 
வாழ்த்த ஆயிரம்
உறவுகள்


வாழ் நாள் முழுவதும்
என்னை வாழவைக்க 
நீ..

-யாழ்_அகத்தியன


 


  

 


வெற்றியின் பெறுமதி
தோல்வியால்தான்
உணரமுடியும்...
 
 

-யாழ்_அகத்தியன் 

வாழ்கை என்பது
நிரந்தரமில்லை

எனவே

வாழ்வதற்காய்
உழைக்காதே
வாழ்ந்துகொண்டே
உழை...-யாழ்_அகத்தியன்


 
கண்ணாடிப் பெட்டிக்குள்
வாழ்ந்தாலும் மற்றவர்கள்
உன்னை பார்க்கும்படியாக
கடிகாரமாய் வாழ்..

 

-யாழ்_அகத்தியன்


கட்டாயத்தில்
 வருவதல்ல காதல்
கட்டாயங்களை
மீறி வருவதே காதல்

 

-யாழ்_அகத்தியன்

 

 

 


 


 
  Today, there have been 12 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free