* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  இணையத்தில் அவள்..!!
 

இணையத்தில் அவள்.....!!
 
என்னை வெப்கொம்மில்
விடாமல் பார்க்கிறாயே
ஏன் வீட்டில் யாருமே
இல்லையா..?


***ஹையோ.. !   
செல்லம் நீ திமிரா
பேசும் போதே
நினைத்தேன் இவ்வளவு
அழகாய் இருப்பாய் என்று
அடிக் கள்ளி.......


***கண்டதும் காதலில் எனக்கு
நம்பிக்கை இல்லாமல் போனது
சாட்டில் உன்னை சந்தித்ததால்....


***


உலகமே என்னை ஒதுக்கிவைத்தாலும்
ஆன்லைனில் நீ நின்றால் போதும்
உலகத்தையே ஒதுக்கி வைப்பேன்
உனக்கு முன்னாலே....


***


நாம்
சாட்டில் பேசும்போது நமக்கே
தெரியாமல் பல கவிதைகள்
இறந்து போகிறது இனியாவது
நாம் பேசுவதை பதிந்துவை நீ
கிழவி ஆகும் போது படித்துக்
காட்ட வேண்டும்..


***


என் கணனி என்னவோ
நான் தன்னை பார்பதாய்
நினைத்து ரொம்ப
வெக்கப்படுகிறது....நீ
ஆன்லைனில்
வந்துவிட்டாயா
என அடிக்கடி
நான் பார்க்கும் போது..


***என் மெசெஞ்சரை கேட்டுப் பார்
என் காதலை உன்னிடம் சொல்ல
வந்து எத்தனை தடவை உனக்கு
அனுப்பாமல் அழித்த கவிதையை..


***
என் அம்மா ஊருக்கே சொல்கிறா
என் மகனுக்கு கணனியில்
எல்லாம் தெரியும் என்று
அவாக்கு எப்படி தெரியும்
எனக்கு உன்கூட சாட் பண்ண
மட்டும்தான் தெரியும் என்று....


*************************************
**************************
*********************
***************
***********
****
**
* 

 
-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 23 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free