* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  உயர்வானவளே........!
 

உயர்வானவளே.......!


So Beautiful Eyes

என் கண்களே எனக்குப் பிடித்த
ஒளிப்பதிவுக் கருவி
காரணம் அதற்கு உன்னை
மட்டுமே பிடிக்கத் தெரியும்.....






*************







 என் பல முத்தங்களுக்கு
சில முத்தங்களையே
திருப்பித் தந்திருக்கிறாய் நீ
உன்னை என்னிடம் இழப்பதற்காகவா
முத்தக் கடனில்
மூழ்கிக் கொண்டிருக்கிறாய்........






**************







கவிதை என்று யார் கேட்டாலும்
உன் பெயர் சொல்வேன்
உன் பெயர் என்னவென்று
எவர் கேட்டாலும்
நான் எழுதாத காவியம்
என்பேன்.......






*************







என்னை எழுத வைத்தவள்
நீ என்றாலும்
நான் கவிஞனானது
உன்னை அழைத்து
அழைத்துத்தான்........






****************







உன்னைப் பற்றி எழுத
நினைத்தபோதெல்லாம்
எழுதிக் கொண்டேயிருந்தேன்
உன்னை விட எழுத நினைத்தேன்
எழுதுவதையே மறந்துவிட்டேன்........







******************************************
******************************
*******************
*************
****
**
*



 
-யாழ்_அகத்தியன்




 
 
  Today, there have been 133 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free