உன்னை நாளையும்
சந்திக்கலாம் என்ற
சந்தோசத்தைவிட
இன்றும் உன்னைப்
பிரிவதே கொடிது....
************
நம் முதல் சந்திப்பை பற்றி
யாரிடமாவது பேச
நினைக்கும் போதெல்லாம்
வாயடைத்துவிடுகிறது
நம் முதல் பிரிவு....
************
ராஜ்மஹாலில் கூட
கடைசியாக நின்றாலும்
நுழைந்துவிடலாம்
யாருமே காத்திராத
உன் வீடுதான்
என்னை நுழைய விடாது
உலக அதிசயமாய்
தெரிகிறது....
************
எப்பதான் எனை
உன் வீட்டுக்கு
கூட்டிச் செல்லப்
போகிறாய்
நான்
முதல் முதலாய்
வாங்கிக் கொடுத்த
பொம்மை
கிழவியான பிறகா..?..
*************
உன்னைப் பார்த்தால்
யாருக்கும் அலுக்காதுதான்
அதற்காக உன்னை உன்
வீட்டிலே வைத்திருந்தா
என் கண்கள்
சும்மாவிடுமா..?
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|