* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  கவியானவளே… [02]
 



கவியானவளே… [02]





கவிதை எழுதுவதை நிறுத்திவிட
நினைக்கும் போதெல்லாம் உன்
பெயரை எழுதி தொலைக்கிறது
என் பேனா.......




**********************






ஒவ்வொரு தூக்கத்திலும்
அடிக்கடி விழிக்க வேண்டி
வருகிறது
உன்னோடு தூங்குவதாய்
கனவு காண்பதால்
.......





************************




குடி குடியைக் கெடுக்கும்
என்பதை
எழுதிவிட  வேண்டும்
உன் உதட்டிலும்.......





**********************




காதல் பாடத்தில்  இருவருமே
சித்தி அடைந்தோம்
மறந்ததில் நீயும்
மறக்காததில் நானும்.....





**********************






நான் பயணிக்கும்  பாதையெங்கும்
என்   கவிதைகளை விதைத்துக்கொண்டே 
போகிறேன் ஏதெனும் ஒன்றிலாவது
நீ இழப்பாறுவாய் என்ற
நம்பிக்கையில்......





****************************




யாரவது எனக்கு எழுந்து நின்று
இடம் தர மாட்டார்களா என
உதைக்கிறது உன் நினைவு......






**********************************
************************
***************
*****
**
*



-யாழ்_அகத்தியன்

 
 
  Today, there have been 223 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free