மனமானவளே......!
உன் கோடி முத்தங்களையும்
தோற்கடித்துக் கொண்டிருக்கும் பெருமையில்
இன்றும் இனிக்கிறது உன் முதல் முத்தம்.....
****************
உனக்கும் கவிதைக்கும்
அப்படி என்ன கோபம்
சேர்ந்து வராதளவுக்கு......
****************
காதலைக் கொண்டாட வருசத்தில்
ஒரு நாள்தான் காதலர்தினம் என்றால்
அந்தத்தினத்தையே
வருசம்பூரா கொண்டாடுவேன்
உன்னோடு நான்......
*****************
என்னை கவிஞனாக்கியதன்
பெருமை உலகுக்குரியது
எனக்கான கவிதை நீ என்பதின்
பெருமை எனக்குரியது ..........
****************
நான் உறங்கா நேரத்தில்
என் விழியாய் நீ
நீ கனவு காணும் நேரத்தில்
உன்னைக் காணும் விழியாய் நான்....
********************************************
****************************
*******************
***********
*****
***
*
-யாழ்_அகத்தியன்
|