* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  புதுமையானவளே....
 

புதுமையானவளே.....! 14

தாயைத் தவறவிட்ட குழந்தையின்
கண்ணீரை துடைத்துவிட்ட உன்
கைவிரலில் தவறவிட்டேன்
என்னை நான் உன்னிடம்....


**********

நீ நீயாக இருக்கும்
உன் பிடிவாதக்காகவே
நான் நானாக இல்லாமல்
நீயாக மாறலாம்...


**********

உன் இமைகள்
சேரும் அழகிலே
இரவாகலாம் நான்
விடியாமல் போனாலும்
பரவாயில்லை....


**********

உன்னை மறந்து
என்னால் உறங்க
முடியவில்லை


உன் இமைகளாவது
சேர்ந்திருந்தால்
இரவல் கொடு


கனவில் நன்றி
சொல்வேன்.....


********** 

 நீ என் கவிதைகளுக்கு
வாசகியாக இருந்ததற்கு
பதிலாய்

 
நீயும் கவிதை
எழுதியிருக்கலாம்

 
நீயாக மாறியதில் இருந்து
வாசிப்பதை மட்டுமே
விரும்புகிறேன்  நான்....


****************************************
*******************************
*********************
***********
****
*


                                                                          யாழ்_அகத்தியன் 

 
  Today, there have been 8 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free