* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  என் கையில் உன் பேனா..!
 


என் கையில் உன் பேனா.......!
87912456gp0.jpg

உன்னைத் சந்தித்து
சில மாதமே ஆனபோதும்
எப்படியானேன் உன்னவளாய்...


*****இன்றுவரை உன்னை நேரில்
சந்தித்ததே இல்லையே
எப்படி எப்படி_என்னை
உன் வசம் இழுத்தாய்
எதற்காய் உன் வசமானேன்
எதுவும் புரியாதவளாய்....*****
இதுவரை தூக்கம்  வராமல்
என் விழிகள் துடித்ததே இல்லையடா..


ஏன் தான் இன்று  உன் பெயரை
கோடி முறை  உச்சரிக்கும் வரை
தூங்க  விடுவதில்லை உன் நினைவு...


*****உன்னை பொறுக்கி என்று கூட
திட்ட துணிந்தவள் நான்_ ஏன்
தான் உன்னை நீயே திட்டினால்  கூட
என் மனம் பொறுப்பதில்லை........


*****
காதலை மதித்த போதும்
நான் காதலிக்க துணியாத
கோழையாய்த் தானிருந்தேன்
என்னை வாழ்ந்தால் உன்னோடு  என
சொல்ல வைத்தாய் _சொல்
என்னவனே சொல்.....

*****என் கிறுக்கல்கள் என்றாலே
 கை தட்ட பலர் இருந்த  போதும்
என் கண்கள் உன் கவிதைக்காகவே
தினம் விடியவைக்கும்...


*****

Upload Photos Love Pics Funny Pics

என்னவனே நான் கிறுக்கி
எறிந்த காகிதத்தில்தானே
இன்னும்  கசங்கிக்கிடக்கிறது
நான்  சொல்லத் துடிக்கும்
என் காதல்...

*****என்மேல் எனக்கே இல்லாத  அக்கறையை
உன் மேல்  கொண்டேன் அதனால்த்தானோ
கனவைக்கூட தினம் 
விழித்திரிந்து காண்கிறேன்...


*****

உன் விழிபார்க்கும் தூரத்தில்
நானில்லாத  போதும்
உன்னைக் காக்க  எங்கோ
ஓர் மூலையில்
உன் இமையாக (வரக்)
காத்திருக்கும் நான்.....


*****************************************
*******************************
*********************
***********
****
*

 

-யாழ்_அகத்தியன் 

 

 
  Today, there have been 22 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free