* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  காதல் கவி நிலா...*2*
 


காதல் கவி நிலா...*2* 


பொய்யை அழகாய்
சொல்லத் தெரிந்தால்
அது கவிதை


கற்றுக்கொண்டேன்
உன்னிடம் நான்.....


*************குழந்தையும்
உன் அழகும்
ஒன்றுதான்


ஏதாவது செய்து
எப்படியாவது ரசிக்க
வைத்துவிடுகிறது.....


*************

எனக்குத் தெரியாத
வார்த்தைகளால்தான்


உனக்கான கவிதை
என்னுள் உறங்கிக்
கொண்டிருக்கிறது......


*************
நீ
எழுதிய


அழகான
கவிதை

கிறுக்கலானது


உன்
கையொப்பம்
கவிதையானதால்.....


*********************************************
****************************************
*****************************
**********************
********************
******
*****
**
*

-யாழ்_அகத்தியன்
 
 
 
  Today, there have been 63 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free