என் கனவே நீ என்பதால்தான்
கலைந்துபோகும் உறக்கத்தை
விரும்புவதில்லை நான்.......
**************
உன் விழிகளுக்கு இமையாக மட்டுமல்ல
உன் உறக்கத்தில் உன்னைக் காக்கும்
விழியுமாவேன் நான்.......
**************
நீயே எனக்கான கவிதை என்பதைக்
கண்டறிந்ததில் கிறுக்கன் நான்
கவிஞனானேன் உனக்காய் உலகுக்கு....
*************
ஆயிரம் கவிதை எழுதிக் கிறுக்கனானேன்
உன் பெயர் எழுதி கவிஞனானேன்.....
**************
உனக்கான கவிதை என்று தெரிந்தும்
எனக்கா என நீ கேக்கும் அழகுக்காகவே
எத்தனை கவிதையும் எழுதலாம் நான்......
*****************************
******************
**********
****
**
*
-யாழ்_அகத்தியன்
|