* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  மன்னவனே........!
 

மன்னவனே.......!
 

காதலனே எனக்கு எதுவும் வாங்கிவராதே  
முடிந்தால் உன்னை  யார்  கண்ணும்
படாமால் கூட்டிவா
அதுவே போதும் 
நான்  கவலையின்றி  கண் உறங்க.....


************


உனக்காக பிறந்தவள் நான் என்றதில்
குழந்தையாய் நான் மகிழ்ந்ததை விட
உன் கவிதையின் கரு நான் என்பதிலேயே
தாயாய் நான் அதிகமாய் மகிழ்ந்தேன்....


************பாவம் என்  கன்னங்கள்
 நீ ஆசையாய்  கொடுக்கும்
ஒவ்வொரு  முத்தத்தையும்
பொத்தி வைத்திருக்க  தெரியாமல்
தடவி பறிக்கும்  என் கை விரல்களிடம் 
கொடுத்து ஏமாந்துவிடுகிறது......

************இப்படி என் வீட்டவர பயப்பிடுவாய்
என்று  தெரிந்திருந்தால்

உன் புகைபடத்தை என்
அறையெங்கும்  ஒட்டி வைத்து
 
என் கோழைத்தனத்தை
வெளியே அனுப்பியிருக்க
மாட்டேன்.......


***********

Lovely quotes 38 - image

வெக்கம் கேட்ட  கவிஞன் நீ
என் வெக்கங்களை  கவிதையாக்கியே
என்னை வெக்கப்பட மட்டும்
வைத்துவிட்டாய்.......


**********************************
************************
***************
*****
**
* 
                                                                          -யாழ்_அகத்தியன் 
  Today, there have been 10 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free