உன்னைத் தேடி கிறுக்கிய
கிறுக்கல்கள் எல்லாம்
உன்னைக்காட்டிக் கொடுத்துவிட்டு
தலைமறைவாகிவிட்டன...
அவைகளை நீ படித்தால்
எழுதிய என்னை
உனக்கு பிடிக்காமல்
போய்விடுமோ
என்ற பயத்தில்.......
*************
![](http://wwwdelivery.superstock.com/WI/223/1439/PreviewComp/SuperStock_1439R-1056696.jpg)
உன்னைக் காதலிக்கவும்
வேறு யாரையும்
காதலிக்காமலும் இருக்க
கற்றுத் தந்த என் காதல்
ஆசிரியை நீ......
************
![](http://www.koodal.com/cinema/cine_reviews/2008/santosh-subramanium-387.jpg)
குயில் பாடுவதைவிட
அதை ரசிக்க நீ
படாது பாடு படுவதுதான்
என்னை
ரசிக்க வைக்கிறது.....
*************
![](http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQ4UfX02QYC1W89-aBbun_P4nlP3nZdfRyu0sT6W0BqQRKl_l9KTQ&t=1)
நாய்க்கு நீ பயந்து
என்னைக் கட்டிப்
பிடிப்பதால்தான்
எனக்கு நாய் நன்றி
உள்ள மிருகம்.....
*************
![](http://1.bp.blogspot.com/_3_2FCxXqZPQ/SYByRKc2GjI/AAAAAAAAHJ0/AYMFhW77_ig/s400/kiss-wallpapers.bmp)
நீ
முத்தமிடுவதைவிட
முத்தமிடும்போது
நீ மிகயழகு.....
அதையும்
சில வேளைகளில்
ரசிக்காமல்
பண்ணிவிடுகிறாய்
கண்களில் முத்தமிட்டு....
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|