* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  மனமே மனமே....!
 


மனமே மனமே....!
 

மனதார உனை நினைத்து
மறக்காமல் உனக்காக
மூச்சுவிடும்
ஜிவன் நான்.........

************தினம் தினம் உனை மறக்கப்
பார்த்து கண்ணீரால் கரைந்து
போனாலும் உனை நினைத்தே
உயிர் பெறுகிறேன் நான்......


************உன்  நினைவுகளால் நினைவுக்
கடலில் நீந்தினாலும்  உனை
மறக்க முடியாமல்
மூழ்கித்தான் போகிறேன்
பலமுறை தரையில் நான்..............

************நீ கற்றுக் கொடுத்த எல்லாவற்றையும்
மறந்துவிட்டேன் உன் விம்பத்தை
மறக்கப் போய் மறப்பது எப்படி
என்பதையும் நான்.............

************
 

தினசரி திரையிட்டு பார்பதுண்டு
உன் முதல் நாளில் இருந்து
உன் இறுதி நாள் வரையான
நம்ப முடியாத உன் நடிப்புகளை
கண்ணிரை ஓடவிட்டு நான்.......


************உன்னை சுலபமாக காதலித்ததைவிட
உன்னிடம் காதலை சொல்ல
எவ்வளவு கஷ்ரப்பட்டேனோ….
அதே போல்தான்..
உன்னை நினைப்பதைவிட
உன்னை மறக்கவும்…………


**********************************
************************
***************
*****
**
*-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 22 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free