காதலிக்கும் தேவதை....!
உனக்காக இருக்கவா..?
உன்னோடு இருக்கவா..?
என்றால்
உனக்கா எழுதிக் கொண்டு
உன்னோடு இருக்கவே
விரும்புகிறது மனசு......
************
நியமாக உன்னோடு
வரமுடியாமல் போனாலும்
என் நிறமாவது வருகிறதே
உன் நிழலாக......
************
நீ பயத்தோடு
வருவதைக் கண்டாலே
நான்
தனியா பேச வந்ததை
மறந்து விடுகிறேன்.......
************
நீ படபடப்பதை
யாரும் பார்த்தால்
பயத்தை விரும்பும்
கோழை என என்னை
நினைக்கப் போறார்கள்........
************
நீ என்னைக்
காதலிக்கிறாய்
என்பதை என்னால்
நம்பமுடியாமல்
இருக்கிறது
பொறுக்கியை
எப்பிடி தேவதை
காதலிக்கும்..?
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|