* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  இனியவளே....! {06}
 



இனியவளே....! {06}






இனியவளே…


நேற்று வீதியில் தவற விட்ட
தன் ஊன்றுகோளை  தேடிய  வயோதிபரிடம்
நீ தேடாமல் எடுத்து கொடுத்த  போதுதான்
என் பார்வை  உன் மேல் தவற ஆரம்பித்தது...






*************************************







எனக்கு நிலவை
அதிகம் பிடிக்கும்
என்பதால்தான்


என் இதயத்துக்குள்
உன்னை
வரவழைத்தேன்......






*************************************







விலக விலகத்தான்
காதல் அதிகரிக்குமாமே
எங்கே ஒரு தடவை
கண் மூடித் திற.....






************************************







வீட்டுக்கு பக்கத்தில்
கோயில் இல்லை  என்ற
கவலை  என் அம்மாவுக்கு

எனக்கந்த  கவலை இல்லை
எதிர் வீட்டில்  நீ இருப்பதால்.....






*****************************************
*******************************
*********************
***********
****
*





-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 2 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free