* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  இனியவளே....! {03}
 


இனியவளே....! {03}

இனியவளே....


உனக்கு காதலனாய் பிறந்ததை விட
உன் காதலாக பிறந்திருக்கலாம்


அப்படியென்றாலாவது


உன்னோடு சேர்ந்து உன் கூட
வாழ்ந்திருக்கலாம்......


***********************************
கவனமாய் கார் ஓடு
உன்னை  கொஞ்ச  நேரமாவது
காற்று  வாங்க வைக்க
ஏதேனும் ஒரு சந்தியில்
சிக்னல் விளக்காய்
காத்திருப்பேன்..............


***********************************
உன்னைப் பார்த்தால்  மட்டும்
என் கவிதைகள்
கண்ணாடி  போடுகிறது


ஏனுங்க...ம்ம்..
உனக்காய் காத்திருந்து   என்னைப் போல்
என்  கவிதைகளுக்கும்  கண்
தெரியாமல் போய்  விட்டது போல.....


***********************************உன் தொலைபேசிக்கு 
எனக்காக  நீ கொடுத்த  முத்தத்தால்
ரொம்ப  கவலைப்படுகிறது
என் தொலைபேசி

உன் தொலை பேசியாய்
பிறந்திருக்கலாமெயேன்று......


*****************************************
*******************************
*********************
***********
****
*

-யாழ்_அகத்தியன்

 

 
  Today, there have been 9 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free