* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  கவிதையே தெரியுமா..?
 

தலைப்பின்றி
ஒரு கவிதை
    அவள் பெயர்......

 --------------------------------------வார்த்தைகள் வற்றிவிட்டது
கலந்து பேச வரச் சொல்லுங்கள்
என்னை ஏமாற்றியவளை
ஆணையிட்டான் கவிஞன்.....

 

 

--------------------------------------தாரம் தாயானதில்
புரிந்து கொண்டேன் ஏன்
தாரத்துக்கு முன் தாய்
என்பதை......


--------------------------------------காதலியின் பெயரை
வைக்க சம்மதித்தாள்
என்னால் தாயான
மனசை புரிந்த மனைவி......


--------------------------------------இருந்த இடத்தில்
இருந்து உலகம் சுற்றுகிறாள்
என் கவிதையில் அவள்......


--------------------------------------கவிஞனின்
கல்யாணவீட்டில்
கவலைப்பட்டாள்
கவிஞனாக்கியவள்......--------------------------------------கவனமாக இருக்கிறான்
காதலிக்கு கவிதை எழுதுபவன்
ஆயுத எழுத்தை பாவிக்கக் கூடாது
என்பதில்......--------------------------------------காதலிக்கே மிஞ்சவில்லை
எப்படித் தானம் செய்வேன்
என் கவிதைகளை
அன்னைக்கு சொன்னான்
கவிமகன்.....--------------------------------------உனக்கு பிடிக்காத
என் கவி(குழ ந்)தைகளை
நீயே போட்டுவிட்டு போ
குப்பைத் தொட்டிக்குள்...-------------------------------------- 
சுமக்க முடியாமல்
கவிக் கருவை
கலைக்கப் போனவன்
கவலையோடு
திருப்பி வந்தான்
தாமதம் என்ற
கவிதையோடு.......


**********************************
************************
***************
*****
**
 *
 
 
 
 
-யாழ்_அகத்தியன்
 
  
 
  Today, there have been 23 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free