* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  அன்னையே தெய்வம்...…{01}
 
 
அன்னையே தெய்வம்...…{01}

தாயே அன்று உந்தன் மடியில்
மறந்து போன
  என் எல்லா சோகமும்
ஒன்று சேர்ந்து என்னைக்கொல்கிறது
எனைத் தூங்க வைக்க
தூரத்தில் நீ என்பதால்.........


*******************இந்த உலகில் எந்த
மூலையிலும் கிடைக்கவில்லை
உந்தன் கருவறையில் கிடைத்த
எனக்கான பாதுகாப்பு..........


***************என் மேலான உந்தன்
கவனத்துக்காகவே
எத்தனை முறை வேண்டுமானாலும்
குழந்தையாய் பிறக்கலாம்
உனக்கு நான்......


********************

 
எந்தப் பாசப்படியைக் கொண்டு
நிறுத்தாயோ தெரியவில்லை
உன் எல்லா குழந்தைக்கும்
ஒரே அளவிலான அன்பையே
காட்டுகிறாயே..........


******************என் தாரத்தின்  மறுபிறவியில்
உணர்ந்து கொண்டேன்
நான் பிறக்க நீ தாங்கிய
பிரசவ வலியை.......


*******************உன்னில் தடுக்கி விழுந்தபோதும்
உன் பக்தனாய் அம்மா
என உன்னையே அழைத்தபடி
விழுந்திருக்கிறேன் நான்......


********************நான் பார்த்திருக்கிறேன்
உன் கண் வலிக்காக அழாமல்
என் மேல் விழுந்த தூசிக்காய்
நீ கண்ணீர் சிந்தியதை.....


********************அன்று நிலாவைக் காட்டி
நீ சோறு ஊட்டையில்
அருமை அறியாமல்
உன் கையை
தட்டி   விட்டிருக்கிறேன்இன்று நிலாவும் இருக்கிறது
சோறும் இருக்கிறது
 
தூரத்தில் உன் கை
அம்மா ரொம்பப் பசிக்கிது.....


*******************************************
********************************
*****************************
************************
***********
****
**
*
                                                     -யாழ்_அகத்தியன் 


 
  Today, there have been 50 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free