* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  மொழியானவளே......!
 

நான் - உறக்கம்
நீ - கனவு


உன் வரவுக்காகவே
விடிய விடியத்
தூங்குவேன்.....

**********

Romance – quote 19 - photo

என்னைத் தொலைக்காமல்
உன்னைத் தேடினேன்
என்பதில் பெருமை எனக்கு


என்னை நான் தேடவே நீ
கிடைத்தாய் என்பதில்
பெருமை உனக்கு......

***********என் சொந்தங்களில்  நான் தான்
முதல் கவிவாசகன்  என்பதில்
சிறிய கவலை எனக்கு


இதுவரை யாருமே 
உன்னை  பார்த்து 
யார் எழுதியது என்று
விசாரித்ததில்லையே.....


************உன் தாயைப்போல் என் நேரமும்
உன்னைக் கவனிக்க என்னால்
முடியாமல் போனாலும்


உன்னைக்  காணத நேரங்களில்
தாயாக நான் ஏங்கித்
தவிப்பதுண்டு.......


***********


DSC_0056

உனக்காக காத்திருந்தால்
என் கால்கள் வலிப்பதில்லை
என் மனசு ஏறி நிற்பதால்
என் தலைதான் வலிக்கும்.....


**********************************
************************
***************
*****
**
*                                                                             -யாழ்_அகத்தியன்
 
  Today, there have been 22 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free