| 
 எனக்குள் நீ.........!
 
 
 
 
  
 நமக்குள் போர் நிறுத்த
 ஒப்பந்தம் வேண்டாம்
 நமக்குள் சமாதான ஒப்பந்தம்
 செய்து கொள்வோம்
 அப்படியென்றாலாவது
 சமாதான மீறல்
 புரிகிறாயா என்று பாப்பம்....
 
 
 
 
 
 *****
 
 
 
 
 
 
நான் குடிக்கவேயில்ல
 இருந்தபோதும்
 குடிகாரனாய் நடிக்கிறேன்
 உன்னை
 பேசவைக்க வேண்டுமே....
 
 
 
 
 
 
 ****
 
 
 
 
 
 
 என்ன தவம் செய்ததோஎன் வார்த்தைகள்
 உனக்காய் கவி எழுதுகையில்
 மெய் எழுதுக்களும்
 உயிர் பெற்று விடுகின்றது....
 
 
 
 
 
 
 *****
 
 
 
 
 
   மழை விட்டது
 உனக்கும் தெரியும்
 எனக்கும் தெரியும்
 இருந்தும் என்
 குடைக்குள்
 இன்னும் நீ..
 
 
 
 
 
 
 *****
 
 
 
 
 
 
  
  
கோவம் வரும் போது  
உன்னை  
நினைக்க சொன்னாய்  
வராத போதும் 
உன்னை நினைத்தேன்  
இப்ப என்னை 
நினைப்பாயோ..
 *******************************************
 *******************************
 *********************
 ***********
 ****
 *
 
-யாழ்_அகத்தியன் 
 
 
 
 
 
 |