கவியானவளே...[10]
உனக்காக ஏதாவது
எழுதும் போதுதான்
எழுத்துக்களின்
நெருக்கடியில் சிக்கி
மூச்சு விட இடம்
தேடுகிறது என் காதல்....
************************
என்னைப் போல் யாரும்
கண்ணைத்தானம் செய்வதை
பார்த்துவிட்டு இறந்து
போயிருக்க மாட்டார்கள்...
ஆனால்...
கண்ணுக்கும் தெரியாது
நான் இறந்து போனது
அவள் திருமணவீட்டில்
என்று....
****************************
உனக்காகவே உழைத்ததில்
உன்னை வாங்க மறந்துவிட்டேன்
என் மனதையும் உன்னிடம்
கொடுத்ததால்.....
*******************************
நதியாக ஓடி வா என்றாய்
வந்த பின்தான் தெரிந்தது
என்னை உன்னோடு கலக்க அல்ல
கரைக்கத்தான் வரச் சொன்னாய்
என்று....
*****************************
உன் ஆடையின் அழகில்
உன்னழகு யாருக்கும்
தெரியக் கூடாது என்பதிலும்
நான் அக்கறையாக இருந்ததில்
தோற்த்தான் போனேனடி
உன் ஆசைக் கணவரிடம்....
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|