என் கனவே நீதான்.....!
கனவு காண யாரும்
உறங்கப் போவதில்லை
நான் மட்டும்தான் பகல் கனவு
கண்டு கொண்டு இருக்கிறேன்
நான் தூங்குவதாக......
************
நீ
என்னை மட்டுமல்ல
என் உறக்கத்தையும்
சேர்த்துத்தான்
கலைத்துவிட்டாய்......
************
மறுபடி நான் உன்னை
சந்திக்க நேர்ந்தால்
என் உறக்கத்தையாவது
கெஞ்சிக் கேப்பேன்......
************
மறுபடி நான் தூங்கிப்போனால்
என் கனவில் உன்னையே
கெஞ்சி கேப்பேன்.......
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|