* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  இனியவளே....! {12}
 இனியவளே....! {12}
[am.JPG]

இனியவளே…


கோயிலுக்கு போனாலாவது உன்னை
ஞாபகப்படுத்த  எதுவும்    இருக்காது
என்றுதானிருந்தேன்
ஏனோ என்னை கண்டதும்  குருக்கள்
உந்தன் பெயரில்  உள்ள   மந்திரத்தையே
திரும்ப திரும்ப சொல்கிறார்.....

************உன்னை சந்திக்க  பேருந்தில்தான் வருகிறேன்
ஏதோ நான் விமானத்தில் வருவது போல்
இடுப்புபட்டியை  தேடுகிறேன்......


**************எனக்காக நீயும் உனக்காக நானும்
விட்டுக்கொடுக்கும் போட்டியில்தான்
இன்னும் பிரியாமல் கூட வருகிறது
சமாதான புறாவாக நம் காதல்....


****************உன்னை சந்திக்கும் போது கருக்கொள்கிறது
உன்னை பிரியும்போது கவிதையாய்
பிறக்கிறது...........


****************தயவு செய்து என்னை  கவிஞன் என்று
உண்மை  சொல்லாதே  -கிறுக்கன்
என்று பொய் சொல்லிவிடு
அது போதும் எனக்கு  நான்
பொய் சொல்லாதவன் 
என்று நீ நம்பிவிட...........


*************நிலையில்லாத வாழ்க்கையில்
எதிலும் நிம்மதி இல்லமால்  வாழ்ந்து வந்தேன்
அனாதையாய் நானும்  எங்கிருந்து வந்தாய் நீ
 என்   நிம்மதியாகவும் என் ஆயிரம் உறவுகளின்
சொந்தகாரியாகவும்.....


*****************************************
*******************************
*********************
***********
****
*


-யாழ்_அகத்தியன்

 

 
  Today, there have been 53 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free