* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  காதலாகுமா காதல்...!
 


காதலாகுமா காதல்.......!




தேடித்தான் உன்னை
கண்டு பிடித்தேன் இருந்தும்
இன்னும்  தேடுகிறேன்
உனக்குள் என் காதலை...






*****







நான் பேசிக்கொண்டே இருக்க  உன்
கண்களிடம் கற்றுகொள்ள வேண்டும்
நான் பேசாமல் இருக்க உன்னிடம்
கற்றுகொள்ள வேண்டும்...






*****







நீ காட்டும் யார் என்றாலும்
சண்டை பிடிக்க தயார்
உன் கண்களை காட்டத வரை..






*****







உன்னை சிரிக்கவைத்து
பாக்க ஆசைதான் இன்னும்
முழுசாய் பாக்க விட்டதில்லை
உன் கன்னக்குழி..






*****







நீ கிடைக்கத்தான்  கவிதை எழுதுகிறேன்
இருந்தும் காட்டமல்   மறைக்கிறேன்
கிடைக்காமல் போய்விடுவாயோ  என்று.....






*****







உன்னை ஒருதலையாக காதலிப்பது
முட்டாள்தனமாக இருந்தாலும்
உன்னைக் காதலிக்கிறேன் என்பதே
என் ஆயுளின் கெட்டித்தனம்.......






*******************************************
*******************************
*********************
***********
****

*




 

-யாழ்_அகத்தியன்
 

 
 
  Today, there have been 58 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free