* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  பேசும் கண்கள்........!
 


பேசும் கண்கள்........!





பொய் பேசும்
சொந்தமாய்
உன் உதடும்



மெய் பேசும்
தோழிகளாய்
உன் கண்களும்
இருக்கும்வரை



என்னோடு பழக
யாரும் தேவை
இல்லை.......






***************







கவிதை பேசும்
கண்களை வைத்துக்
கொண்டு


கதைக்குமா கண்கள் என
பொய் பேசும் உதட்டை
வைத்திருக்குறாய்
நீ.....






***************






கவிதைக்கு
பொய் அழகென்று
பொய்  சொல்கிறார்கள்


கவிதை பேசும்
உன்  கண்களுக்கு
பொய்யே  பிடிக்காதே......






***************








உன் கொள்ளைப்
பார்வைக்காவே
களவு போகலாம்
உன்னிடம் நான்.....






***************







உங்கள் கண்களுக்கும்
என்னவள் கண்களுக்கும்
ஒரே ஒரு வேறுபாடுதான்


உங்கள் கண்கள் இமைக்கிறது
என்னவள் கண்கள் வாயடிக்கிறது....






*******************************************
*******************************

*********************
***********
****
*




-யாழ்_அகத்தியன்

 
 
 
  Today, there have been 200 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free