இனியவளே....! {09}
இனியவளே..
என் காதலை சொல்ல ஒன்றுக்கு
மூன்று பூக்கள் பறித்து வந்தேன்
ஏதேனும் ஒன்றாவது வாடாமல்
இருக்குமென்று....
என்ன அதிசயம் பூவான
உனைக் கண்டவுடன்
எல்லா பூக்களும்
சிரிக்கிறது........
***************************
அழகான பூவாக இருந்தாலும்
பூக்கடையில் பூ
வாங்க பிடிக்காது
அவர்கள் யாரை நினைத்து
பறித்தார்களோ
யாருக்கு தெரியும்........
*************************
தயவு செய்து என்னை கவிஞன்
என்று எப்போதும் ஏற்றுக்கொள்ளாதே
ஏனெனில்....
ஒவ்வொரு தடவையும்
நான் உண்மை சொல்லும் போதும்
உன்னிடம் உண்மை சொல்லவாவென
கேட்டு விட்டு சொல்ல
வேண்டி வரும்......
***********************
என் நம்பிக்கைதான் நீ என்று
சொன்ன பின்னும் உன் வாழ்க்கையை
தர மறுத்தால் நம்பிக்கைதான் வாழ்க்கை என்பது
பொய்த்து விடுமல்லவா நீயே சொல்.....
*****************************************
*******************************
*********************
***********
****
*
-யாழ்_அகத்தியன்
|