உனக்காக காத்திருக்கையில்
என்னைக் கடப்பவர்கள் மட்டும்
ராசியானவர்கள்
உன் முகத்தை
அவர்களில் தேடுகிறேனே....
************
அந்த சூரியனுக்கு யார்
என்னைக்
காட்டிக்கொடுத்தது
பாருங்கள்
நிலாவுக்காக காத்திருக்கிறேன்
என்ற கோவத்தில் என்னை
கறுப்பாக்கி கொண்டிருக்கிறது...
************
உனக்காய் காத்திருந்த
இடத்தில் கொஞ்ச நேரம்
நி
ன்
று
பார்
உன்னைப் பெற
என்னை நான் இழந்த
வலி புரியும்....
*************
தாமதமாய் வருவதையே
பழக்கமாய் கொண்டவள் நீ
தெரிந்தும்
உனக்காய் காத்திருக்க
பழக்கப்பட்டவன் நான்....
************
" நிலா" என்று
யார் உனக்கு பெயர் வைத்தது
உனக்காய் என்னை தேய
வைத்துக் கொண்டிருக்கிறாய்.....
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|