* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  தித்திக்கும் தீபாவளி.......!
 தித்திக்கும் தீபாவளி......!

ஒட்டுமொத்த விளக்கையும்
ஒரே நேரத்தில் ஏற்றிவிட்டு
அழகு பார்க்கிறாய் 
விளக்குகளோ
நீ ஏற்றிய சந்தோசத்தில்
அணையப்போவது கூடத்
தெரியாமல் அழகாய்
எரிந்துகொண்டிருக்கிறது.....


************* நீ ஏற்றிய விளக்குகளில்
எல்லாரும் குளிர் காய்கிறார்கள்
நான் மட்டும் உன்
இருவிழிப்பார்வையால்
எரிந்து கொண்டிருக்கிறேன்....

************

Diwali Sweets Laxmi Ganesha Wallpapers

பட்டாசே உன்னைக்
கொளுத்தி வீசுவதால்
வெடிக்காமல்
விட்டுவிடாதேஉன் ஒவ்வொரு
விரச்சாவிலும்தான்
என்னவள் என்னை
இறுக்கிப் பிடிக்கிறாள்...

**************உன் கையில் இருக்கும்
விளக்கை நான் ஏற்றும் வரை
தெரியாது


 
சுட்டெரிக்கும் உன் கண்களால்
சுடாமலும் இதமாக பார்க்கத்
தெரியும் என்பதை....


************"தீபாவளி வாழ்த்துக்கள்"
என நீ அனுப்பிய குறுந்தகவலை
பாடமாக்கியபடியே விடியவைத்தேன்
என் தீபாவளியை.....


*************** நீ  விளக்குகளை ஏற்ற
ஆரம்பித்தாய்
இரவுகள் தீபாவளி
கொண்டாடத்
தொடங்கிவிட்டது....


*************

ஒரேயொரு முறை
தலை நிமிர்ந்தபடி
விளக்கேற்று


உன் முகத்தை
ஏற்றிய சந்தோசத்தில்
விளக்குகள் தீபாவளி
கொண்டாடட்டுமே......


**********************************
************************
***************
*****
**
*-யாழ்_அகத்தியன் 
  Today, there have been 9 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free