சூரியகதிரும் சோகமான நினைவும்....!
சின்ன வயசு எனக்கு அதைவிட
சின்ன வயசு உனக்கு
மீசை எனக்கும்
ஆசை உனக்கும்
வராத காலம் அது.. ம்ம்
பசுமையான காலம்...
புத்தகங்களை சுமக்க
இயலாத வயதில்
உன்னை மட்டும்
சுமந்ததில் சுகம்
எனக்கு..
நாம் கை பிடித்து
பொடி நடை
போடுவதற்காகவே
நம் பள்ளி வரவை
அதிகரித்தோம்..
ஒரே விட்டில் வாழ்ந்தலும்
ஒரு வார்த்தை பேசியதில்லை
பயத்தல் நானும் வெக்கத்தால் நீயும்
ஊமையாய் ஊனமாய் வாழ்ந்தோம்
இதில்தான் உண்டானது எனக்கும்
உனக்குமான உறவு...
உன்னில் விழிக்க வேண்டும்
என்றே தினமும் தூங்க
போவேன் நான்
அதற்காக நீ அதிகாலை
எனக்கு முன் விழிப்பாய்..
உன்னில் விழிக்காமல்
என்றாவது என் தூக்கம்
கலைந்ததுண்டா....?
பள்ளியில் விழுந்த எறிகணை
என் உயிரை பறித்திருக்குமோ
என பதறியபடி நீ வர பழக்கம்
இல்லாத கண்ணிரோடு
உன்னை நான் சந்திததில்
அன்றே கண்டேன் உன்
கண்களில் சுனாமி அலையை..
ஒரே விட்டில் வாழ்ந்த போதும்
ஒருவரும் கண்டு பிடிக்காமல்
வளர்தோமெ நம் காதலை
அதுதான்
அதிசயத்தில் அதிசயம்..
என் சைக்கிளில் ஏறி
வரவேன்டும் என்பதில்
உனக்கு அளவில்லாத ஆனந்தம்
அதற்காகவே அதிகாலை விழித்து
உன் சைக்கிளின் காற்றை
துறந்து விடுவாயே
அதை அறிந்த நானும் என்
சைக்கிளை அடிக்கடி
கழுவி துடைப்பேன்..
மாதத்தில் ஒரு தடைவையேனும்
உன் கண்ணீரை பார்க்க வேண்டும்
என்பதில் எனக்கு அளவு கடந்த ஆசை
அதற்காகவே எனக்கு மலேரியா வராமலே
மூளைமலேரியா வந்தது போல் நடித்து
உன் கண்ணீரை வர வழைத்து
ரசிப்பேன் கண்ணீரையும் உன் ஏக்கத்தையும்....
என் பெயரை அடிக்கடி கூப்பிட
ஆசை உனக்கு அதற்காகவே
பரிசாய் கேட்டாய் கிளி பிடித்து
தர முடியுமா என்று...
நீ கேட்ட உயிரையும் தருவேனென்றவன்
கிளி பிடித்து
தரமாட்டேனா என்று..
கிளி பிடிக்க போய்
கிளியோடு விழுந்து
மண்டை உடைந்த
போதும் கிளிக்கு
எதுகுமாகாமல்
காப்பாற்றி தந்தேன்..
என் முதல் பரிசாய்
அழகான கிளியை..
நம்மை பிரிக்க
நம் பெற்றோர்களுக்கு
முன் படை எடுத்து பிரித்தான்
நம்மையும் இலங்கை இராணுவம்
சூரியகதிர் நடவடிக்கையால்...
எத்தனை நினைவுகள்
எல்லாம் நினைத்தால்
கண்ணீரால் என் கண்களூம்
கரைந்துவிடும்......
****************************************
*******************************
*********************
***********
****
*
-யாழ்_அகத்தியன்
|