கோவமான உன் முகத்தை பார்பதற்காகவே
என் ஆசைகள் உனக்கு பிடிக்காத செயல்களை
தெரிந்து வைத்திருக்கிறது......
************

வாய்காரன் நான் என்பதை தெரிந்தா
என்னில் உனக்கு அதிகம் பிடித்தது
என் பேச்சு என்றாய்
அன்றில் இருந்து நான் யாரிடமும்
வாய் காட்டுவதே இல்லை........
**************

உன்னை சந்திக்க கண்மூடித்தனமாய்
கார் ஓடி வந்தாலும்
கவனமாய் உன்னை தேடிக்
கொண்டிருக்கும் என் மனசு.............
**************

எல்லா எழுத்துக்களையும் வைத்து
கவிதை எழுதினாலும்
இன்னும் என்னால் உனக்கு பெயர்வைத்ததால்
கவிஞனான உன் தந்தைபோல்
இரண்டு எழுத்தில் அழகான கவிதை
எழுத முடியவில்லை.........
*****************

நாடு கிடைக்க போராடுபவன்
போராளி என்றால்
நீ கிடைக்க போரடும் நான்
காதலாளிதான்..........
*****************

என்னை எழுதவைத்துக்
கொண்டிருக்கும் நான்
எழுதாத கவிதை நீ.......
****************************************
****************************
********************
******
**
*
-யாழ்_அகத்தியன்
|