* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  காதலானவனே........!
 


காதலானவனே...........!
 

நீ எழுதும் கவிதை அழகுதான்
அதற்காக
யார் கண்ணையும்  நம்பி
என்னைக் கைவிட்டுவிடாதே......


************** நீ இல்லாத தருணங்களில்
வாடிப்போகும் எனக்காக

 நீ கொடுத்த பூச்செடிதான்
என்னை மலரவைத்துக்
கொண்டிருக்கிறது........


***************எதுவும் கேக்காமலே என் மடியில்
நீ உறங்கியபோதுதான்
தெரிந்தது
உன் அன்பின் ஏக்கம்


அதற்காக உன் குழந்தைதனத்தை
கையிலுமா  வைத்திருப்பாய்
என்னை பிடித்தவாறே
உறங்குகிறாய்.......


***********
****எவ்வளவு அவசரமாய் வாசல் கடக்கையிலும்
உன்னை ஞாபகப்படித்தி விடுகிறது
முதல் முதல் சந்திப்பில் நான்
வரும்வரை நீ சாய்ந்து நின்ற
 வீதிச்சுவர்..........


*************** நீ பிரியும்போது கவனமாய் இரு என்று
சொன்னதற்கு பதிலாய்
உன் வலதுகையை
கொடுத்துவிட்டு போயிருக்கலாம்
என்னை பிரியவிடாது அணைத்துக் 
கொண்டிருந்திருக்கும்.......********************************************
*************************
****************
*********
****
**
*

-யாழ்_அகத்தியன்
 
  Today, there have been 9 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free