* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  இனியவளே....! {10}
 



இனியவளே....! {10}





இனியவளே…



ஒரு நாள் உன்னை  விட்டு 
பிரிந்து வந்ததற்கே  
எப்படி  பிரிய முடிந்ததென்றா
கேக்கிறாய்...



எங்கே உன் இதயத்தை
திறந்து பார்  பிரிவுக் கவிதை
எழுதிக்கொண்டிருப்பேன்.....






**************************







நீயே சொல் .. என்  நம்பிக்கை
நீயென்ற பின் நம்பிக்கை இல்லாமல்
நீ தள்ளியே நின்றால்
விழுந்திட மாட்டெனோ....






*************************








உன் முதல் சந்திப்பும் உன் முதல் பிரிவும்
சில நாட்களுக்குள் நடந்தேறியிருந்தாலும்
உன் பிரிவு மட்டும்  இன்னும் என்னை
வாட்டுகிறது....






************************








உனக்கும் இரவில்  உலாப் போக பிடிக்குமா
சரி வா போய் வருவோம்
அதற்க்கு முன் நிலாவிடம் சொல்லிவிட்டு வா
கொஞ்ச  நேரம் ஓய்வெடுத்து வரும்படி......






**************************






உன்னை நான் பார்க்க  வரும் போது  மட்டும்தான் 
ஏறும் பேருந்தையும் இறங்கும் தரிபிடத்தையும்
பக்கத்தில் இருப்பவர்களிடம்  கேட்டு தெரிந்து
கொள்கிறேன்  அவ்வளவு அவசரம் எனக்கு......






*****************************************
*******************************
*********************
***********
****
*



-யாழ்_அகத்தியன்

 

 
 
  Today, there have been 154 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free