* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  தேடித்தாருங்கள் என் பேனாவையாவது.......!
 


தேடித்தாருங்கள் என் பேனாவையாவது........!



என் முதல் கவிதையை
யார் கேட்டாலும்
அழகாய் எழுதிக் காட்டுகிறது
உன் பெயரை என் பேனா......




என்று எழுதியதும்
என் பேனாதான்......






************






 
விலக விலகத்தான்
காதல் அதிகரிக்குமாமே
எங்கே ஒருதடவை
கண்மூடித் திற................




என்று எழுதியதும்
என் பேனாதான்..........






************







உன்னைக் காதலித்ததால்
தலைக்கனம் எனக்கு
நீ காதலிக்காததால்
தலைக்கனம் என்
கவிதைகளுக்கு..........




என்று எழுதியதும்
என் பேனாதான்..........






************







உனக்கு யாரோ ஒருவனின்
கவிதை பிடித்ததில் இருந்து
கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன்



என்னில் ஏதாவது ஒன்று
உனக்கு பிடித்ததில்  
கவிதையாவது
இருக்கட்டுமே என்று............





என்று எழுதியதும்
        என் பேனாதான்.............





************







அவள் என்னைக்  கொஞ்சம்
கொஞ்சமாய்  மறந்து தொலைத்த 
பாதையில்_ நான் என்னைத் தேடி 
எடுத்துக் கொண்டேன்
அவளை நினைத்து வாழ.............





என்று எழுதியதும்
என் பேனாதான்............






************







களைப்பில்  எந்த இடத்திலும்
இளைப்பாறி விடாதே 
அந்த இடத்தில் இளைப்பாறியே
களைத்து போகிறேன் நான்...............





என்று எழுதியதும்
         என் பேனாதான்...............






************







கரைந்த துளியை தேடும்
புல் போல் தேடுகிறேன்
உனை நீ வேரோடு
கலந்ததை மறந்து.............




என்று எழுதியதும்
     என் பேனாதான்...........






************







நீ இல்லாத காதலும்
காதல்இல்லாத நீயும்
என்றும் எனக்கு
தோல்வியே...............





என்று எழுதியதும்
        என் பேனாதான்.............






************







உன் கோவத்தை -என் 
மேல் இறக்கி வைத்துவிட்டு 
போய் விடுவாய் பாவம்
நான் படாத பாடுபடுகிறேன்




உன் கோவத்தை  யாரிடமாவது
இறக்கி வைக்க.................




என்று எழுதியதும்
          என் பேனாதான்................






************







நீ தாமதமாய் வரும்வரை 
எப்படி சமாளிபேன்
என் கவிக்குழந்தைகளை
ஒவ்வொன்றும்  அம்மா
வேணும் என்கிறது.........





என்று எழுதியதும்
என் பேனாதான்............






************







நான் காதலால் கவிஞன்
ஆனதை விட



பைத்தியக்காரனாகி  இருக்கலாம்
அப்படியென்றாலாவது  அவளை
நினைத்து சிரித்திருப்பேன்...........!





என்று எழுதியதும்
என் பேனாதான்.............






************







தினம் ஒரு கவி எழுதி 
உன்னைத் தேட விட்டேன் 
எல்லாமே களைப்பில்
உன் ரசிகைகளைத்தான் 
தேடித்தருகிறதது..........




என்று எழுதியதும்
என் பேனாதான்...............






************







அவளைச் சிரிக்கவைத்து 
அழாமல் எடுத்துக்  கொடுத்தேன் 
என்   செத்தவீட்டு  புகைபடக்காரனாய் 
அவளின் கல்யாணவீட்டுப்
புகைப்படத்தை.................




என்று எழுதியதும்
என் பேனாதான்.............






************







உன்னைச் சுற்றி   வரச்சொன்னா
என் கவிதைகள்  உலகம் சுற்றி
வருகிறது.......



உலகம் சுற்றி   வரச்சொன்னா
நான் உன்னை  சுற்றி
வருகிறேன்................





என்று எழுதியதும்
என் பேனாதான்..............






************







உண்மையில் ராசியான
பேனாதான்  என்னவள்
போல்.....



தயவு செய்து யாரவது
தேடித் தர முடியுமா...?
இரண்டில் ஒன்றையாவது..............







**********************************
************************
***************
*****
**
*




-யாழ்_அகத்தியன்
 
 
  Today, there have been 95 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free