* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  ஈழத்து அகதியாய் நான்.........!
 


ஈழத்து அகதியாய் நான்...........!
நாளை நான் உயிரோடு இருப்பேனா
ஈழத்தில் நண்பனின் இறந்தவிட்டில்
இன்று நான்........


*********************

அம்மா அங்கே
அம்மாக்காக அகதியாய்
இங்கே நான்......


*********************
காணாமல் போனால்
கண்டுபிடித்து தருவார்கள்
பிணமாக.....

**********************
தினமும் இறப்பவர்களின் பட்டியலில்
சேரதவர்கள் சுனாமியால் இறந்த
ஈழத்தமிழர்கள்........

*********************
 
வகுப்பறையில் மகள் படிக்காட்டியும்
உயிரோடு திரும்ப வேண்டும்
சாமியறையில் தாய்......

********************* 
நான் இறந்தால் கொள்ளிவைக்க
வந்துவிடாதே
நான் பெற்றதில் உன்னை மட்டும்தான்
காப்பாற்ற முடிந்தது
.....

********************* 
அம்மாவோடு ஆசையாய் பேச
தொலைபேசி எடுத்தால்
அம்மா கவலையாய் பேசுவதை
கேக்கவே நேரம் முடிந்துடும்....

*********************
 
என் தாயை நான் பார்த்தே
இருபது வருசமாச்சு
எப்படி சொல்லிக் கொடுப்பேன்
என் பிள்ளைக்கு என் தாய்
எப்பிடி இருப்பா இன்று என்று....

********************* 
 
எப்ப அம்மா சொந்த ஊருக்கு போவோம்
பொறு போவோம் இருபது வருசமா
இதைத்தானே அம்மா சொல்கிறாய்....

********************* 
தலைமுறைக்காகவே சம்மதிக்கிறாள்
திருமணத்துக்கு
நாளை விதவை ஆகலாம்
என்று தெரிந்தும்.....

*********************

சமாதானம் என்றால் என்ன அப்பா
சண்டைக்கான ஒத்திகை
மகனே......

 
**********************************
************************
***************
*****
**
*

 -யாழ்_அகத்தியன்
 
  Today, there have been 25 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free