* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  உறவானவளே........!
 

நீ கவிதை என்றால்
 நான் அதில் பொய்
 நீ அழகாக தெரிவதற்காய்
உண்மைகளை சாகடிப்பேன்....






*********************







கரப்பான்பூச்சியை
கண்டதும் நீ என்னைக்
கட்டிப் பிடித்தாய்



 நான் கரப்பான்பூச்சிக்கும்
 நன்றிக்
கடனாளியாகிவிட்டேன்.....






*******************







வகுப்பாசிரியைக்கு உன் மேல்  பொறாமை
படிப்பிக்கும் தன்னைக் கவனிக்காமல்
நான் படிக்கும் உன்னைக் கவனிப்பதால்..






********************






பேசாமல் எனக்கு நீ முத்தமிடு
இல்லையேல் ஏதாவது பேசிவிடு
உன் இதழ்கள் ஒன்றை ஒன்று
முத்தமிடுவதையாவது நான்
பார்த்துவிட்டுப் போகிறேன்....






********************







எல்லாரும் அழகுக்காக
பொட்டு வைப்பார்கள்



 நீ மட்டும்தான் உன்
அழகில் யாரும் கண்படக்கூடாது
என்பதற்காக பொட்டு வைக்கிறாய்.......






*****************************
***************
******
**
*





-யாழ்_அகத்தியன்


 
 
  Today, there have been 109 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free