கவியானவளே... [01]
என் கைக்கெட்டியதில்
வாய்க்கெட்டத் தவறியது
என்றும் நீ மட்டும்தான்.....
******************
கிடைத்தது எல்லாம்
பெரிதாகவே தெரிந்தது நீ
கிடைக்காமல் போகும் வரை......
*****************
உன் நினைவுகளுக்கு
ஆடை மாற்ற வேண்டும்
கொஞ்சம் என்னைத் தூங்க
விடுகிறாயா........
*******************
நீ வேண்டும் என்பது
என் பழைய கவிதை
நீ மட்டும் வேண்டும்
என்பது என் புதுக்
கவிதை.........
*******************
நீ வாங்கிக் கொடுத்த செருப்பு
உன்னைவிடக் கடிக்க ஆரம்பிக்கிறது
நான் மது அருந்த போகையில்....
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|