* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  விசித்திரமானவளே..!
 

விசித்திரமானவளே.......!





கும்பாபிசேக மேளச்சத்திலும்
அமைதியாய் இருக்கும்
சாமி போல அடக்கம்
உனக்கு......



எப்படி
நாதஸ்வர இசைபோல
வாசித்தாய் உன் காதலை.....






********************







அழும் குழந்தையைக்கூட
அழகாய் சிரிக்கவைத்து
புகைப்படம் எடுக்க தெரிந்த
கலைஞன் நான்.....



எப்படி உன் அழகான புன்னகை
மட்டும் புரியாமல் போனது
எனக்கு.....






*****************







பொறுக்கவே
முடியவில்லை


என் மறதிகளை


நீ கொட்டித்தீர்த்த
ஞாபகங்கள்


அவ்வளவும்
அளவில்ல
பொக்கிசங்கள்.......






**********************






பிழையின்றி தமிழ்
எழுத தெரியாத என்னை
கவிஞனாக்கவே வந்து
தொலைத்திருக்கிறது காதல்.......






*****************







வெக்கப்படுவதற்காகவே
சேலை கட்டும் பெண்கள்
மத்தியில்


வெக்கத்தையே ஆடையாய்
கட்டியிப்பவள் நீ.....






*********************************************
****************************************
*****************************
**********************
********************
******
*****
**
*







-யாழ்_அகத்தியன்

 
 
  Today, there have been 159 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free