* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  உயிரானவளே....!
 


உயிரானவளே......!
 
வாயாடியாய் இருந்தும் அமைதியாய்
வந்தமரும் புதிய மாணவிபோல்
வந்தமர்ந்தாய் என் இதய
வகுப்பறையில் நீ............

************என் முதல் வரி  நீ  காதலித்தையும்
மறுவரி நீ கைவிட்டதையும்

எப்படியாவது காட்டிக்
கொடுத்துவிடுகிறது
என் கவிதைகள்..............


************பலரோடு இருக்கையிலும்
தனிமையே உணர்கிறேன்
நீ இல்லாததால்............************உனை மாதத்தில் மூன்று நாட்களில்
என் மடியில் தாலாட்டியதுதான்
ஞாபகம் வருகிறது தாய்மார்களை
காணுகையில்...........

************வானவில்லாய் நீ
வந்து போனாலும்
வானமாய் காத்திருக்கும்
என் கவிதைகள் எப்போதும்
உனக்காக..............

**********************************
************************
***************
*****
**
*-யாழ்_அகத்தியன்

 
 
  Today, there have been 23 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free