நீ வாழ நான் பாடுவேன்........!
நீ ஒட்டிவிட்டு
எறிந்த
பொட்டு நான்
யார் யாரோ
கால்களால்
மிதிக்கப்
படுகிறேன்......
************
என்னை நீ ஊதிவிட்டு
உதைக்கும்போதுதான்
தெரிந்துகொண்டேன்
எனை வீரனாய்
நினைக்காமல்
நீ விளையாட்டு
பந்தாய்த்தான்
நினைத்தாய் என்று.....
************
ஆச்சரியமாகத்தான்
இருக்கிறது
கவிஞனாக்கினாய்
என்ற கோவத்தில்
உனக்காக நானெழுதிய
எந்தக் கவிதையிலும்
ஆயுத எழுத்து
இல்லாமல் இருப்பது....
************
அன்று உனக்கும் சேர்த்து
சுவாசித்தேன்
இன்று உன்னவருக்கும்
சேர்த்து சுவாசிக்கிறேன்....
************
நீ வாழ்ந்தவீடு நான்
என்னை விட்டுவிட்டு
புகுந்தவீடு
சென்றுவிட்டாய்
இனி நீ திரும்பிவர
நினைத்தால்
தயவு செய்து
தனியாக வந்துவிடாதே
நீ இல்லாமல் சாய்ந்து
கிடக்கும் நான்
உடைந்து
விழுந்துவிடுவேன்.....
**********************************
************************
***************
*****
**
*
-யாழ் அகத்தியன்
|