* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  என் பேனாவின் ரகசியம்..!
 



என் பேனாவின் ரகசியம்........!





என் முதல்க் கவிதையை
யார் கேட்டாலும் அழகாய்
எழுதிக்காட்டுகிறது
உன் பெயரை..






*****







கண் திறந்து தேடுகிறேன்
ஏதாவது கவிதை
எழுதியிருக்குமா
என் பேனாவென்று..






*****





தெரிந்தே எழுத்துப்  பிழைவிடுவது
என் பேனாதான்
உன் பேனாவுக்கு  நன்றி சொல்ல..


என்னைக் கேட்பாய்  என்று நினைத்தால்
நீ என் பேனாவை  கேக்கிறாய்


எப்படி பிடிக்கும் இனி  என்
பேனாவை  எனக்கு....






*****






 
உலகமே சந்தேகப்படுகிறது
என் பேனா யாருக்காக
தலைகுனிகிறதென்று..


அதை அறிந்த நீ
வேணுமென்றே  சந்தேகபடுகிறாய்
யாரிடம் வாங்கினேன்
என் பேனாவையென்று..






*****







உன் தோழிகள் மட்டும்தான்
கண்டு பிடிக்கிறார்கள்
உன் சினுங்களை மட்டும்
கவிதையாய் வடிக்கிறது
என் பேனாவென்று....






*****







உன் புகைப்படத்தோடு
ஒரு நாள் இருந்த
பின்தான் என் பேனா
கவி எழுத  மறுக்கிறது..


உனக்காய்  எழுத நினைத்த
எந்த கவிதையையும்
எழுதவேயில்லை
என் பேனா..



அதனால்தான் இன்னும்
நான் கிறுக்கனாய்.....






*******************************************
*******************************
*********************
***********
****
*





-யாழ்_அகத்தியன


 
 
  Today, there have been 50 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free