என்னவனே......!
என்னவனே..
உன்னை நினைத்து நினைத்து
வாழ வேண்டும்
உந்தன் மடியில் உயிர்
துறக்க வேண்டும் வருவாயா..?
*****
காலை மாலையாவதும்
மாலை காலையாவதும்
உந்தன் ஆசைக்குள் மறைய
வேண்டும் வருவாயா..?
*****
எந்தன் கோட்டையை விட்டு
நீ போனாலும்
நீ போட்டு விட்டு போன
கோடுகள் ஆறவில்லை
அதற்காகவேனும் வருவாயா..?
*****
கோழி கூவினாலும்
கோயில் மணி அடித்தாலும்
கோலம் போட மறந்தாலும்
உந்தன் மடியில் மறக்க வேண்டும்
அதற்காகவேனும் வருவாயா..?
*****
கனவில் நான் குளித்து
நினைவில் காய்கிறேன்
என்னை உடுத்திக்கொள்ள
உண்ர்வோடு வருவாயா..?
*****
அங்கத்தில் இடம் பிடித்தாய்
ஆசையை தூண்டி விட்டாய்
அனுபவத்தை கொளுத்தி விட்டாய்
அணையாமல் எரிகிறேன்
அதற்காகவேனும் வருவாயா..?
*****
கோடை மழையாய்
நீ வந்தாலும் காதலா
அடை மழையாய் வரவேற்பேன்
அதற்காகவேனும் வருவாயா..?
*****
இரவைக் காட்டிக்கொடுக்கும்
நிலவைப் போல
எந்தன் வெக்கத்தைக் காட்டிக்
கொடுக்க இரவில் வருவாயா..?
*****
ஊமையான உலகத்தில்
உன்னோடு பாட வேண்டும்
துடிக்காத நரம்பெல்லாம்
இசைக்க வேண்டும் அதைக்
கேட்டு நீ ஆடிக் களைக்க வேண்டும்
அதற்காகவேனும் வருவாயா..?
*****
மறந்து விட்டாயா நம்
தனிமை பிரிந்து நான்கு
மாதமாச்சு எங்கே ஒரு
தடவை வந்து பிரிந்து விடு
நாளாக நாளாக
நான் பழுக்கிறேன்
நீ சுட்ட பழம்தானேடாநான்
பரிமார வருவாயா..?
*****
இரவும் நானும் சேர்ந்தால் ஏக்கம்
நீயும் நானும் சேர்ந்தால் வெக்கம்
என் ஏக்கத்தை களைந்து விடு
என் வெக்கத்தை பார்க்க
வேண்டும் உன்னோடு நான்
அதற்காகவேனும் வருவாயா..?
*****
வருவாயா காதலா வருவாயா
உன் வரவுக்காய் நான் வழியாகிறேன்
என் வாசல் எங்கும் விழியோடு
காத்து கிடக்கிறேன் வருவாயா
காதலா வருவாயா...?
*******************************************
*******************************
*********************
***********
****
*
-யாழ்_அகத்தியன்
|