நான் என்னை
மறந்து ரசிக்கும்
இடம் எது தெரியுமா
உன்னை முதல் முதல்
சந்தித்தபோது நான்
சிலையாய் நின்ற அந்த
பூங்காவனம்தான்.....
*************
என் காதல் கவிப் புத்தகத்தை
உன் நெஞ்சோடு அணைத்துக்
கொண்டு செல்கிறாய்
எப்படியும் நீ வீடு சென்று
படிக்கும் போது
காமக்கவிதையாய்
மாறியிருக்கும்.....
************
உனக்கு பயப்பிடமா
பேய் கதை
சொல்ல தெரியாதா
உன்னை பார்த்து
நானல்லவா
பயப்பிடுகிறேன்...
************
உன்னிடம் காதலை
சொல்ல நினைக்கும்
பொழுதுகளில்தான்
நான் நானாக இருக்கிறேன்
அதையும் நீயே சொல்லிவிட்டால்
என்னை நான் முழுவதுமாய்
மறந்துவிடுவேன்....
************
உனக்கு காதல்
கதையே தெரியாதா
நீ சொன்ன கதைகள் எதுவுமே
என் காதலை உன்னிடம்
சொல்ல உதவவில்லையே.....
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|