* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  மென்மையானவளே.....!
 என் இதயம் மென்மையானது
அதனால்தான்
நான் எந்த தவறுசெய்தாலும்
என்னை கண்டிப்பதில்லை
அப்படிப்பட்ட என் இதயத்தை
கைப்பற்றி என்னை எதுவுமே
செய்யாமல்  பண்ணிவிட்டாய்....

************உன் விழிவீச்சு படும்வரை
அமாவாசை இரவுக்குள்
மறைந்து கிடக்கின்றன
என் கவிதைகள்....

************நீ மட்டும்தான் சிறந்த நீதிபதி
நான் எந்த தவறுசெய்தாலும்
கிள்ளுவதை மட்டுமே
தண்டனையாய் தருகிறாய்......


*************உனக்கு
எதை வாங்கி வருவது
என்ற குளப்பத்தில்
கண்ணை மூடியபடி
ஒன்றை எடுத்தேன்கண் திறந்து பார்க்கையில்கையில் இருந்தது மட்டும்
சிரித்துக் கொண்டிருந்ததுகடையில்  இருந்ததெல்லாம்
அழுது கொண்டிருந்தது....


************


 நீ வாசிக்க
ஆரம்பிக்கிறாய்என் கவிதைகள்
ஒவ்வொன்றும்
கரை சேர்கிறது....


**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன் 
 
  Today, there have been 10 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free