* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  இனியவளே....! {02}
 


இனியவளே....! {02}




இனியவளே…


என்னைக் கோவப்படுத்தி பார்ப்பதற்க்கானா
உன் தேடல் தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது
தோல்விக்கு மத்தியிலும்..



ம்ம்…
உனக்கெப்படி தெரியும் உன்னை யாரும்
கோவப்படுத்தினால்தான்
எனக்கு கோவம் வருமென்று.....






***********************************







நமக்குள் பிரிவே வரக்கூடாது
அப்படி வந்தால் உன்னால்  வரக்கூடாது
ஏனெனில்  அந்த சோகத்தின்
கதாநாயகியாக நீ  இருந்துவிட
கூடாதென்பதால்.....






***********************************





உன் கல்மனதுக்குள் நுழையும்வரைதான்
யோசித்தேன் எப்படி நுழைவதென்று



நுழைந்தபின் மறந்தே போனேன்
எப்படி யோசித்து
நுழைந்தேனென்று.....






***********************************







கவிதைகள் எழுதத்  தெரியுமா
என்று கேட்டார்கள்

நான் தெரியாது
என்றேன்..



அப்போ என்ன
தெரியுமென்று
கேட்டார்கள்



கவிதை ஒன்று
தெரியுமென்றேன்



எங்கே சொல்
என்றார்கள்



உன் பெயரைச்
சொல்லி
முடித்தேன்.....






*****************************************
*******************************
*********************
***********
****
*



-யாழ்_அகத்தியன்

 
 
  Today, there have been 72 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free