* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  உனக்கே உயிரானேன்..!
 


உனக்கே உயிரானேன்....…!

என்னை நீ வாசிக்காமல் போனதில்
கவலைப்பட்டதில்லை நான்

உனக்காகவே என்னை மொழியாக்கி
எழுதிய கவிதையை   நீ
கிழித்தெறிந்ததில்தான்
கண்ணீர் சிந்தினேன்
உன்னால்  முதல்தரம்.....


***********

Lovely quote 40 - image

என் கவிதைகள் அப்படி
என்னதான் பாவம் செய்தது
உன்னால் பாவமாக்கப்பட்ட
எனக்கு பிறந்ததை தவிர....


**********உன்னைச் சுமந்தே சுமைதாங்கியான
என் இதயம்
ஏன் நீ இறங்கியதும்
இப்படி ஒற்றைக் காலில் நிற்கிறது......


************யார் யாரோ என்னை பறித்த போதெல்லாம்
உன்னோடுதானே  இருந்தேன்
எப்படி முடிந்தது என்னை வேரோடு
பிடுங்கி எறிந்துவிட்டு போக.....


************என்னைப்போல் உனக்காக
யாருமில்லை என்றாய்


உண்மைதான்


உன்னைப்போல் யாரும்
என்னை பொய்சொல்லி
ஏமாற்றியதில்லை......


**********************************
************************
***************
*****
**
*


 
                                                                     -யாழ்_அகத்தியன்
 
  Today, there have been 63 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free