* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  கவியானவளே… [05]
 


கவியானவளே… [05]

உன் கண்களில் மிதக்க
ஆசைபட்டு மூழ்கிப்போனது
யார் யாரோ கண்களில்
என் கவிதைகள்............


******************************

 என்னைக் காட்டிக்  கொடுப்பவன்
தான்    தூரோகி என்றால்
என்னவளைக் காட்டிக் கொடுக்கும்
என் கண்களை   யார் என்பேன்..?


*************************நீ அழகாய் கிழித்தெறிவதை
ரசிப்பதற்காகவே அழகான
கவிதைகளாய் எழுதிக்
கொண்டுவருகிறேன்..........

******************************

 
 
சாண் ஏற
முழம் சறுக்கிறது
உன் வீட்டு
வாசல்படி எனக்கு....


********************************என் நம்பிக்கை மீது
நம்பிக்கையில்லாமல் போனது
நீ என்னை மறந்ததை நான்
இன்னும் நம்பவில்லை.........

*****************************அவளைச் சிரிக்கவைத்து
அழாமல் எடுத்துக் கொடுத்தேன்
என் செத்தவீட்டு புகைபடக்காரனாய்
அவளின் கல்யாணவீட்டுப்
புகைப்படத்தை.............


***********************************உன் வீட்டுச் சுவரில் எனக்கு
யாரோ எழுதிய இரங்கல் கவிதை
இன்னும் இறக்காமல் வாழ்கிறது
நீ வாசிக்க மறந்ததால்..........

**********************************
************************
***************
*****
**
*


-யாழ்_அகத்தியன்
 

 
  Today, there have been 22 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free