* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  இயல்பானவளே......!
 

இயல்பானவளே......!


 


தன்னை விதைத்து
காதலை எதிர்பார்த்தவர்கள்
பட்டுப்போனார்கள்காதலை விதைத்து
உன்னை எதிர்பார்த்த
நீ மட்டும்
  என்  மனசெங்கும்
படர்ந்திருக்கிறாய்.....


***************நீ என்னை மட்டும்
உன் வசப்படுத்தவில்லை
என் கவி வாசகர்களையும்தான்பார் கவி எழுதிய என்னை
விசாரிக்காமல்
எல்லாரும் யாருக்காக எழுதியது
என்று உன்னை விசாரிப்பதை.......


*****************
எல்லாரும் இருந்தும் யாருமில்லாத
பூமியில் வாழ்வதைவிட


யாருமே இல்லாத வானத்தில்
நிலாவே உன்னோடு மட்டும்
வாழவிரும்புகிறது
என் காதல் மனசு......


************

Pictures Satyam

என் காதலை கவிதையால்
சொல்ல நினைத்து
தினம் தோற்று போவதற்கு பதில்முத்துக்களால் உனக்கு மாலையிட
கடலில் மூழ்கி
மூச்சடைத்தே இறந்துபோய்
 
ஒரே   நாளிலே  என்  காதலை 
நிருபித்திருக்கலாம்......


****************என்றும் உன் அருகே நடந்து வரப்போகும்
கணவனாகும் வரம் கிடைக்காமல் போனாலும்


உன் கால்தடங்கள் தேடியே ஓடிவரப்போகும்
உன் குழந்தையாகும் வரம்கொடு
அது போதும் எனக்கு
என் காதல் தாயும் நீயே
என்ற அன்புக்கு......


*********************************
***********************
****************
****
**
*                                                                  
-யாழ்_அகத்தியன் 
  Today, there have been 12 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free